சிம்பு தம்பி குறளரசன் காதல் திருமணம்

நடிகர் சிம்பு தம்பி குறளரசன், தாம் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைக் கரம்பிடிக்கிறார்.
சிம்பு தம்பி குறளரசன் காதல் திருமணம்
Published on

நடிகர் சிம்பு தம்பி குறளரசன், தாம் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைக் கரம்பிடிக்கிறார். டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில், அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. தாம் காதலித்த இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இதற்காக, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில், அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். இவர்களது திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி நடைபெறுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com