விஜய்க்கும் ரஜினிக்கும் சண்டையை மூட்டிவிடும் "அந்த" வியாபாரி - குட்டி ஸ்டோரி கேட்டு அலறும் கோலிவுட்

x

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி-2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது....

நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம், வருகிற 15ம்தேதி திரைக்கு வருகிறது. ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

சென்னை

சந்திரமுகி- 2 டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் பங்கேற்பு

இந்நிலையில், சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'சந்திரமுகி 2' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில், இயக்குநர் பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் பி.வாசு, சூப்பர் ஸ்டாரை யாருடனுடன் ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்..

வாசு, இயக்குனர்

"சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்"

"புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான்"

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்"

"விஜய், அஜித் - தனித்தனி அடையாளம் இருக்கு"

"கஷ்டப்பட்டு உழைத்து இடத்தை அடைந்துள்ளனர்"

"அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள்"

"அதற்கான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள்"

"சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேச அவசியமில்லை"

இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்சும், தனக்கே உரிய பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார்

ராகவா லாரன்ஸ், நடிகர்

"அந்தந்த மரத்தில் அந்தந்த காய்கள் தான் முளைக்கும்"

"மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்காது"

"தேங்காய் மரத்தில் மாங்காய் முளைக்காது"

"நடுவில் இருக்கும் வியாபாரிகளால் இந்த பிரச்சினை"

"குடும்பமாக இருக்கிறோம் - பிரித்து பார்க்காதீர்கள்"

நடிகை கங்கனா ரனாவத், டப்பிங் பேசுவது சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார்.

கங்கனா ரனாவத், நடிகை

"இந்தி பதிப்பில் நான் பின்னணி பேசி இருக்கிறேன்" "பின்னணி பேசுவது சவாலாக இருந்தது"

"குறிப்பாக லக லக லக பேசும்போது சிரமப்பட்டேன்"

2005ல் வெளியான சந்திரமுகி படம், பெரும் வெற்றி பெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரும், சந்திரமுகி-2 படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்