கோலிவுட் - ஏப்ரல் ஃபூல் செய்த பிப்ரவரி மாதம்...

2026 பிறந்ததும் பிறந்துச்சு..ஆனா தமிழ் சினிமாவுக்கு சரியான தொடக்கம் அமையல...

மாத இறுதில வெளியான ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி நல்ல வரவேற்பு பெற்றாலும், பெரிய படங்களின் வசூல அது ஈடு செய்ய முடியல.

மொத்தமா பிப்ரவரில 25 புதிய படங்கள் வெளியானாலும் வசூல் குறைவாவே இருந்தது...

2026 பிறந்ததும் பிறந்துச்சு..ஆனா தமிழ் சினிமாவுக்கு சரியான தொடக்கம் அமையல...

பெரிய எதிர்பார்ப்ப ஏற்படுத்திய விஜய்யோட ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் தாமதம் காரணமா ஜனவரியில் வெளியாகாம பிப்ரவரிக்கும் தள்ளிப்போச்சு..

ஆனா இன்னும் அனுமதி கிடைக்காததால, படம் இப்ப வரைக்கும் ரிலீசாகல...

பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் வெளியீட்ட ஒத்திவைச்ச நிலைல.... பெரிய படத்துடன் மோதலை தவிர்க்க தயாரிப்பாளர்கள் காத்திருந்ததால, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள்ல படங்கள் குறைவாவே வெளியானது...

பிப்ரவரில With Love, My Lord போன்ற படங்கள் ஓரளவு வசூல் செஞ்சது...

2026 பிப்ரவரி வரை மொத்தம் 47 படங்கள் வெளியாகிருக்கு..

இது கடந்த ஆண்டை விட அதிகம் தான்... ஆனா பெரிய ஹிட் இல்லாததால, பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவுக்கு ஏமாற்றமான மாதமா மாறிருக்கு...

இப்ப எல்லாரும் மார்ச் முதல் ஜூன் வரை வெளியாகவுள்ள ஜன நாயகன், Love Insurance Kompany, சர்தார் 2, கருப்பு, கராத்தே பாபு, ஜெயிலர் 2 போன்ற பெரிய படங்கள தான் எதிர்பார்த்து காத்திருக்காங்க.

X

Thanthi TV
www.thanthitv.com