``எங்கே ஆரம்பிக்கிறதுன்னு தெரியல...'' - கொஞ்சும் தமிழில் கயாடு நெகிழ்ச்சி
டிராகன் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து நடிகை கயாடு லோஹர் அழகாக தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் பல்லவி ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை கயாடு லோஹர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும், ரசிகர்களின் அன்பு விலையற்றது எனவும், நிச்சயமாக அதனை தனது படங்கள் மூலம் திருப்பித் தருவேன் என்றும் நடிகை கயாடு லோஹர் கூறியுள்ளார்
Next Story
