"விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தம்" - மன்னிப்பு கோரினார், நடிகர் கருணாகரன்

நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் மன்னிப்பு கோரியுள்ளார்.
"விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தம்" - மன்னிப்பு கோரினார், நடிகர் கருணாகரன்
Published on

நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம், சமூக வலைத்தளத்தில் அவருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்களின் செயல்களால் தான் விஜய்யை வெறுக்க தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். இந்த கருத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது தாம் வெறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது என்றும் தமக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் விஜய்யும் ஒருவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாம் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com