"Karma is a Boomerang" - புத்தாண்டில் ரவி மோகனை சாடிய ஆர்த்தி
தனது வாழ்க்கை கதையில், ஒருசில விஷயங்களால் தமது தாயார் வில்லியாக சித்தரிக்கப்பட்டதாக, நடிகர் ரவி மோகனின மனைவி ஆர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆர்த்தி, அதில், கடந்த ஆண்டு உங்களுக்குச் சாதகமாக அமையவில்லை - ஒரு சில விஷயங்களால் நீங்கள் வில்லியாக சித்தரிக்கப்பட்டீர்கள் அம்மா என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்மா ஒரு பூமராங் அம்மா... அது எப்போதும் திரும்பி வரும் என்று தெரிவித்துள்ள ஆரத்தி ரவி, ஆரோக்கியமான, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டு அமைய வாழ்த்துவதாகவும், கண்ணியம் மதிக்கப்படும், நீதி நிலைநாட்டப்படும் ஆண்டாக 2026 அமையட்டும் என்றும் ஆர்த்தி ரவி தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
