

சரவெடி என்ற தனது கதையை பயன்படுத்தி, காப்பான் படத்தை எடுத்திருப்பதாக கூறி குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.