ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...

தமிழறிஞர்.... கவிஞர்... திரைப்படப் பாடலாசிரியர்... என்று பன்முகம் கொண்ட கவியரசர் கண்ணதாசனின் 92 ஆவது பிறந்த நாளில், அவரது திரைப் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.
ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...
Published on

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் சாத்தப்பனார் - விசாலாட்சி தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் முத்தையா. அவர்தான் பிற்காலத்தில், கண்ணதாசன். எட்டாம் வகுப்பு வரையே படித்த கண்ணதாசன், 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

4 ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், ஆகச்சிறந்த நூல்கள், கட்டுரைகள் என தமிழில் பாரதிக்குப் பிறகு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கண்ணதாசன்.

அர்த்தமுள்ள இந்து மதம், வனவாசம், மாங்கனி, ஆகிய பல நூல்கள் கண்ணதாசனுக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்தது. கவிஞரானவர் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார். கன்னியின் காதலி திரைப்படத்தில் இடம்பெற்ற "கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே." என்ற பாடல்தான் கண்ணதாசனின் முதல்பாடல்.

திரையுலகில் பாடலாசிரியராக முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கண்ணதாசன், வாழ்க்கைத் தத்துவங்களும், அர்த்தங்களும் பொதிந்திருக்கும், ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

இதேபோல், வாழ்க்கைத் தத்துவங்களை தனது திரைப்பாடல்களில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகப் புகுத்தியவர் கண்ணதாசன்.

Breath

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

கண்ணதாசன் படைத்த ஏராளமான பாடல்கள் இன்றும் மக்கள் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார், கண்ணதாசன். அதேபோல்தான், பாடல் வரிகளும்.

உடல்நலம் குன்றியதால், 1981, ஜூலை 24 ல் அமெரிக்காவிலுள்ள சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அக்டோபர் 17 ஆம் நாள் இயற்கை எய்தினார். கண்ணதாசனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

சேரமான் காதலி' என்ற இவரது நாவல், 1980 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தபோது, கண்ணதாசனை, தமிழக அரசின் அரசவைக் கவிஞராக்கினார்.

தன்னுடைய கடைசி பாடலிலேயே தனக்கான முடிவுரையையும் எழுதிக்கொண்டு விடைபெற்றார்.

கண்ணதாசனின் கருத்துச் செறிவுள்ள பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்தாலும், மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பது நிதர்சனம்.

X

Thanthi TV
www.thanthitv.com