"கங்குவா" சவுண்ட் எஃபெக்ட் - ரசூல் பூக்குட்டி கேள்வி

"கங்குவா" சவுண்ட் எஃபெக்ட் - ரசூல் பூக்குட்டி கேள்வி
Published on

சூர்யாவின் கங்குவா படத்தின் ஒலிக்கலவை குறித்து, ஆஸ்கர் நாயகனும் சவுண்ட் இன்ஜினியருமான ரசூல் பூக்குட்டி சரமாரியாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களது கலைத்திறன் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், சவுண்ட் இன்ஜினியர்களை குறை சொல்வதா அல்லது கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்கள் சொல்பவர்களை குறை சொல்வதா என்றும் கேள்வியெழுப்பி உள்ளார். ஒலிக்கலவை கலைஞர்கள் குரலெழுப்ப இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ரசிகர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்திற்கும் ரிப்பீட் வேல்யூ கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com