கனல் கண்ணனுக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டது தொடர்பாக கனல் கண்ணனுக்கு முன் ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து, கனல் கண்ணன் சர்ச்சைப் பதிவை நீக்கியதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com