ஷாருக் கானுக்கு தலைவலியாக மாறிய கமல்ஹாசன், விஜய்.. அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ?
இந்தி நடிகர் ஷாருக் கான், தென்னிந்திய நடிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். துபையில் உள்ள குளோபல் வில்லேஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தென்னிந்திய திரையுலகில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு ஆகியோர் நல்ல நண்பர்களாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அவர்கள் வேகமாக நடனமாடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நடிகர் ஷாரூக் கான், அவர்களுடன் இணைந்து நடனமாடுவது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதே அதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
Next Story
