கமல் ரஜினி காம்போ.. விலகிய சுந்தர் சி - குஷ்புவை குறி வைத்து கமெண்ட்ஸ்..
இணையத்தில் தன்னை வெறுப்பேற்றுவோருக்கு நடிகை குஷ்பு அடுத்தடுத்து பதிவுகளால் பதிலடி கொடுத்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை, இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, தவிர்க்க முடியாத காரணத்தால், படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்சி அறிவித்தார். இதையடுத்து அவர் விலகியதற்கு பல விதமான காரணங்களை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வந்தனர். அதில் சிலர் நடிகை குஷ்புவை குறி வைத்து மோசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அவரது பதிவு தீயாய் பரவி வருகிறது.
Next Story
