'தமிழ்த் தீ பரவட்டும்' - பராசக்தி பார்த்தவுடன் கமல்ஹாசன் எழுதிய லெட்டர்
பராசக்தி படம் வெற்றி பெற கமல்ஹாசன் வாழ்த்து
பராசக்தி திரைப்படம் வெற்றி பெற நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தீ பரவட்டும் என்ற தலைப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப் போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாக போகிறது என தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம், திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பயோஃபிக்ஷன் கதையை இயக்கிய சுதா கொங்கரா, படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் தாம் பாராட்டு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
