பிப்ரவரியில் தொடங்கும் கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு

x

குருசஷேத்திர போரில் தொடங்கி கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான 'கல்கி' உலகில் அவதரிக்கும் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் எதிர்காலத்தையும் புராணக் கதைகளையும் இணைத்து நகரும் கதைதான் 'கல்கி 2898 ஏடி'....

மகாபாரத கதையின் கருவையும் கதாபாத்திரங்களையும் அடித்தளமாக கொண்டு வெளியாகி இருந்த இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் ,இயக்குனர் நாக் அஸ்வின்.

இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என்றும் அதில் கமலஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் பிரபாஸும் படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்