கைதி படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதி படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி நாளன்று வெளிவர உள்ளது. இந்நிலையில், படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஆயிரத்து 620 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com