ஜோதிகாவின் "காற்றின் மொழி" படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல்

ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் "காற்றின் மொழி" திரைப்படத்தில் மீண்டும், ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெறவிருக்கிறது
ஜோதிகாவின் "காற்றின் மொழி" படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல்
Published on

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் "காற்றின் மொழி" திரைப்படத்தில் மீண்டும், அந்தப்பாடல் இடம்பெறவிருக்கிறது.

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா இப்பாடலுக்கு நடனமாடினார்.

ராதாமோகன் இயக்கிவரும் இந்தப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு, சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தை சேர்ந்த A.H.காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com