இணையும் இயக்குநர் சுந்தர். சி, நடிகர் கார்த்தி கூட்டணி?

x

சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராகவும் , இயக்குநராகவும் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சுந்தர்.சி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா, அரண்மணை - 4 ஆகிய படங்கள் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், சுந்தர். சியின் பிறந்த நாளை ஒட்டி, 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் 'எங்கள் இயக்குநர்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது 'பிரின்ஸ் பிக்சர்ஸ் 'தயாரிப்பில் நடிகர் கார்த்தி தொடர்ந்து நடித்து வருவதால், சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்