Ravi Mohan | ஜெயம் ரவி To ரவி மோகன் - "22 வருஷம் ஆகிடுச்சு.." - வேறு Modeக்கு மாறிய ரவி
நடிகர் ரவி மோகன் சினிமா துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, கராத்தே பாபு பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் , தற்போது கணேஷ்.கே. பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்து வருகிறார். தொடர்ந்து, 'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவரது 'ஜீனி' படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
