Jananayagan Audiolaunch | "ஜனநாயகன்" ஆடியோ லான்ச் - மேடையில் மனம் திறந்து பேசிய தளபதி பாய்ஸ்

x

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் ஆகியோர் விஜயுடனான தங்களது நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பது வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் விஜய்யிடம் லியோ 2-க்கான தேதிகளைக் கேட்டிருந்தால், லியோ ஸ்டைலில் ஸ்வீட் என பதிலளித்திருப்பார் என கலகலப்பாக பேசினார்.

விஜய்யின் பெரிய ஆசை வெற்றி பெற வாழ்த்துக்கள் எனவும் அவரது அரசியல் பயணத்திற்கும் லோகேஷ் வாழ்த்தினார்.

பின்னர் பேசிய நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படம் கலவையான விமர்சனம் வந்ததை சுட்டிக்காட்டி, விஜயை வைத்து தவறுகள் இல்லாமல், ஒரு படத்தை இயக்க நினைப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அட்லி, தனது வெற்றிக்கு விஜயே காரணம் என நெகிழ்ந்ததோடு, விஜயின் எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்வதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்