`ஜனநாயகன்’ அப்டேட் சொன்ன நிழல்கள் ரவி

x

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் தாம் நடிப்பதாக நடிகர் நிழல்கள் ரவி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் அம்பை தென் பொதிகை ராகவேந்திரா ஆலயத்தில் 354-வது குருபூஜையில் நடிகர் நிழல்கள் ரவி, அவரது மனைவி விஷ்ணு பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிழல்கள் ரவி, கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்திலும், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திலும், சூர்யா படத்திலும் தாம் நடித்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்