Jana Nayagan | Vijay | Malaysia | தளபதி தரிசனம் - மலேசியாவை ஸ்தம்பிக்க வைத்த விஜய் ரசிகர்கள்

x

மலேசியாவில் நடைபெறும் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வர தொடங்கிய ரசிகர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

சுமார் 80 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியை காண கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

விஜய்யின் ரசிகர்கள் வைப் செய்தவாறு வருவதால் ஸ்டேடியத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு போக்குவரத்து பாதித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்