ஜனநாயகன் சென்சார் விவகாரம் | விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த உச்ச இயக்குநர்
தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது - பா.ரஞ்சித்
ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் விவகாரத்தில் மத்திய திரைப்பட தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்... அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, தனது படங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
