

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம், ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஓடிடி தளத்தில் படம் வெளியாவது குறித்து தனுஷ் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.