Isha Miracle Of Mind | ஈஷாவின் `மிராக்கிளில்’ 7 நிமிடங்கள் மூழ்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

x

Isha Miracle Of Mind | ஈஷாவின் `மிராக்கிளில்’ 7 நிமிடங்கள் மூழ்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

ஈஷாவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் செயலி மூலம் தியானம்

சென்னையில் மிராக்கிள் ஆஃப் மைண்ட் செயலி மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தியானம் செய்தார்.

சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், உலக மனநல தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் மிராக்கிள் ஆஃப் மைண்ட் எனும் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சத்குருவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் செயலி மூலம் 7 நிமிடங்கள் அனைவரும் தியான நிலையில் இருந்தனர்.

மேலும் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் 150 இடங்களில் மொத்தம் 11 ஆயிரம் பேர் கலந்துகொண்ட மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “மிராக்கிள் ஆஃப் மைண்ட் என்ற சத்குருவின் தியான நிகழ்வில் முதல் முறையாக கலந்துகொண்டேன் எனவும், செயலி மூலம் தியானம் செய்தது நன்றாக இருந்தது“ எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்