ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?
Summary
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
தொடர்ச்சியாக, ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படமும் இந்தாண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் வெளியானதும் ஹெச். வினோத் இப்படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
