மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு - பூஜை போட்ட இயக்குநர் ஷங்கர்

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு - பூஜை போட்ட இயக்குநர் ஷங்கர்
xரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இயக்குநர் சங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வந்தது.

'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தமிழ் சினிமாவையே பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.

அதன் பின்னர் இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே கருத்து மோதல் காரணமாக பட பணிகள் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு புதிய போஸ்டரையும் வெளியிட்டது.

அதில் 'இந்தியன் 2' படத்தை லைகா மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் இந்தியன்2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மீண்டும் துவங்கி உள்ளது.


நடிகர் பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்த காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.Next Story

மேலும் செய்திகள்