"உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட தங்களது நிறுவனம்"- லைக்கா

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த அசம்பாவிதத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
"உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட தங்களது நிறுவனம்"- லைக்கா
Published on

இதுதொடர்பாக நடிகர் கமலுக்கு லைக்கா நிறுவன இயக்குனர் நீல்காந்த் நாராயன்பூர் கடிதம் எழுதியுள்ளார். அதில், உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கொண்டது தங்களது நிறுவனம் எனக் குறிப்பிட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த தலைசிறந்த கலைஞர்களான கமல், ஷங்கரின் கட்டுப்பாட்டில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், அதனால் பாதுகாப்பில் எந்தவொரு குறையும் வைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து, அனைத்து கலைஞர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் அக்கறை செலுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியன்-2 படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்திருப்பதாக கமலுக்கு லைக்கா நிறுவனம் பதிலளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com