நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை - ஷூட்டிங் பாதியில் நிறுத்தம்

நடிகர் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயின் வீடுகளிலும் சோதனை தொடர்கிறது.
நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை - ஷூட்டிங் பாதியில் நிறுத்தம்
Published on

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்திற்குள் புதன்கிழமை படமாக்கப்பட்டு வந்தன. விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள், பிற்பகல் 2 மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அப்போது நடிகர் விஜ​யிடம், பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com