ரெட் ஜெயண்ட்-ஐ கையிலெடுத்த இன்பன் உதயநிதி

x

ரெட் ஜெயண்ட்-ஐ கையிலெடுத்த இன்பன் உதயநிதி

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி பதவியேற்றுக்கொண்டார். தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சரான பிறகு தலைமை பதவியில் இருந்து விலகினார். தற்போது சுமார் 20 வயதே ஆன அவரது மகன் இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அவரது முதல் படமாக, தனுஷின் இட்லி கடை படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளதாக இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய பொறுப்பை ஏற்றுள்ள இன்பன் உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்