யார் கையில் ரோலக்ஸ்-க்கு சாவு?.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரெடி.. லோகேஷின் Next சம்பவம்

x

லோகேஷ் கனகராஜின் மல்டி யூனிவர்ஸ் கதையின் ஒரு அங்கமாக ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி படம் வேண்டும் என ரசிகர்கள் ஏங்கி காத்து கிடந்த நிலையில், அதிரடி அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

விக்ரம் படத்தில் ஃபகத் பாசில், உலக நாயகன் கமல்ஹாசன் என இருவரும் நடிப்பில் ரசிகர்கள் மூழ்கியிருந்த நிலையில்...க்ளைமாக்ஸ் சீனில் வைத்த ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் அதிர செய்தது.

அந்த ட்விஸ்ட் வேறு யாருமில்லை சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான். கண்களில் காதல் வழிய..கொஞ்சல் முகத்துடன் இருக்கும் சூர்யாவை..ரத்தம் தெறிக்க அசல் வில்லனாக காட்டி அலற விட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அந்த நொடியில் பிடித்தது ரோலக்ஸ் பித்து. அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதியை மிரட்டும் வில்லனாக காட்டி பிரம்மிக்க வைத்த லோகேஷ், ரோலக்ஸ்க்கு என தனியாக படம் எடுக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு வலுத்தது.

லோகேஷ் செல்லுமிடமெல்லாம் இந்த கேள்வியும் அவரை துரத்தியது. அதிலும் கைதி படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தின் பேக்ரவுண்ட் ஸ்டோரியே தனிக்கதையாக படமாக்கப்படும் என கூறப்பட்டதால், ரோலக்ஸ்க்கு தனிக்கதை வேண்டுமென ஒற்றை காலில் நின்றனர் ரசிகர்கள்.

இதன் பின் விஜய்யின் லியோ படத்தில் பிசியான லோகேஷிடம், லியோ அப்டேட்டை கேட்டு அலப்பறை செய்த ரசிகர்கள், அப்படியே நைசாக ரோலக்ஸ் குறித்தும் கேட்டு வந்தனர்.

இதற்கிடையில் சூர்யாவுடன் இரும்பு கை மாயாவி படத்தை இயக்க வேண்டும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். ஆனாலும் ரோலக்ஸ் குறித்து பெரிதளவு ஏதும் கூறவில்லை.

லியோ படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் தான் ரசிகர்கள் காதுகளில் தேனை பாய்ச்சியுள்ளார் சூர்யா. சென்னையில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில், பேசிய சூர்யா, லோகேஷ் கனகராஜிடம் இரும்பு கை மாயாவி மற்றும் ரோலக்ஸ் உள்ளிட்ட கதைகளை கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இரும்புக்கை மாயாவிக்கு முன்னர் ரோலக்ஸின் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஒற்றை வாக்கியத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள் திளைத்திருக்க...சமூக வலைத்தளங்களில் இப்போதே கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

விக்ரம் படத்தில் வசூலை வாரி குவித்த லோகேஷ், லியோவிலும் தூள் கிளப்புவார் என்பது தெரிந்த கதையே. இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தொட்டதெல்லாம் வெற்றி என இருக்கும் நிலையில், ரோலக்ஸ் குறித்த திரைப்படமும் அதிரவே வைக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்