Kuberaa | Moviecollections | வசூல் வேட்டையில் `குபேரா’..வெளியான முதல் நாள் கலெக்ஷன் விவரம்
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் உலகமெங்கும் முதல் நாளில் 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் 30 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
