திடீரென மேடையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த "Imagine Dragons" Dan Reynolds

x

நம்ம imagine dragons dan reynoldsக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம்...அதாங்க பிலீவர் சாங் பாடுநாரே அவரேதான்...

இத்தாலியோட மிலன் நகர்ல இவரோட இசை நிகழ்ச்சி நடந்துச்சு...

அப்ப யாரும் எதிர்பார்க்காத வகைல...மேடை மேல ஒரு பாலஸ்தீன கொடி வந்து விழுந்துச்சு...

அத அவர் கைல எடுத்ததும் அவ்ளோ கைதட்டல்கள் dan reynoldsக்கு...

பாலஸ்தீன கொடிய ஏந்திட்டு மேடைல நடந்த dan reynolds அத தன்னோட தோள்ல போட்டுக்கிட்டாரு...

கடைசியா பாலஸ்தீன கொடிக்கு முத்தமிட்டு அவர் மறுபடியும் கூட்டத்துலயே விச ஆர்ப்பரிச்சுட்டாங்க ரசிகர்கள்...

இஸ்ரேல் படைகளோட தாக்குதல்களால காசால இதுவரைக்கும் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுருக்காங்க...

லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைஞ்சுருக்காங்க....

மக்கள் உணவுக்காக அலைஞ்சு திரியுறத தினம் தினம் உலக நாடுகள் பாக்குது...

இந்த சூழல்ல...பாவப்பட்ட மக்களோட ஒற்றுமையா நிக்குற வண்ணமா அமைஞ்சுருக்கு dan reynolds ஓட செயல்னு பலரும் பாராட்டிட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்