``இத நான் சொன்னா தலைக்கனமா?’’ - சோசியல் மீடியாவை கொளுத்திய ராஜாவின் ThugLife வீடியோ
தனக்கு கர்வம் வராமல் வேறு யாருக்கு கர்வம் வரும் என்று இசையமைப்பாளர் இளையராஜா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இளையராஜா சில சமயங்களில் கர்வமாகவும், திமிராகவும் பேசுவதாக விமர்சனங்கள் வந்ததுண்டு. இதுகுறித்து மனம் திறந்த இளையராஜா, “உலகில் எந்த தலை சிறந்த இசையமைப்பாளருக்காவது இது நடந்ததுண்டா?.. ஒரு குழந்தைக்கு உயிர் வந்ததும்...ஒரு யானைக்கூட்டம் வந்து பாட்டைக் கேட்டு விட்டு போனதும்...மதம் பிடிக்கவிருந்த யானை தூங்கியதும்...எங்கேயாவது நடந்துள்ளதா?“ என கேள்வி எழுப்பினார். இதை, தான் சொன்னால் மிகவும் தலைக்கனத்தோடு இருப்பதாக பலர் விமர்சிப்பதாகவும், தனக்கு வராமல் வேறு யாருக்கு வரும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இளையராஜா கூறுவது உண்மை என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
