இளையராஜா இசை நிகழ்ச்சி - "5000 ரூபாய் டிக்கெட்.. வேஸ்ட்டு.." - கொந்தளித்த ரசிகர்கள்

x

கரூரில் நடைபெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள திறந்தவெளி திடலில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், போதிய இருக்கைகள் போடப்படாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே நிகழ்ச்சியைப் பார்த்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர். குடிநீர் ஏற்பாடுகள் முறையாக செய்து தரப்படவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டிய நிலையில், ரசிகர் ஒருவர் கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்