ஒருபோதும் நடிக்க மாட்டேன் இசைதான் என் ஆர்வம் - அனிருத்

ஒருபோதும் நடிக்க மாட்டேன் இசைதான் என் ஆர்வம் - அனிருத்

பிரபல இசையமைப்பாளர் அனிருத், தான் ஒருபோதும் நடிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் நடிப்பது குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என அனிருத்திடம் கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு இசைதான் தனது ஆர்வம் என்று பதிலளித்த அவர், கடந்த 15 ஆண்டுகால வெற்றி போதாது என்றும், இசையில் இன்னும் பல சாதனைகளை படைக்க விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அனிருத் சமீபத்தில் வெளியான கமல், ரஜினி இணைந்த புதிய படத்தின் ப்ரோமோ வீடியோவில் நடித்து இருந்தார். இந்நிலையில் பாடல் மற்றும் ப்ரோமோஷன் வீடியோக்களில் மட்டுமே தான் நடிப்பேன் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com