``வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை'' - நடிகர் சூரி

x

கதை நன்றாக இருந்தால், புதிய இயக்குநராக இருந்தாலும் நடிக்கத் தயார் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சூரி நடித்த மாமன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய சூரி, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை" என்றார்.

மேலும், இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது என்றும், அதில் இருந்து விலகி சுறுசுறுப்பான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் எனவும் சூரி கேட்டுக்கொண்டார்.--


Next Story

மேலும் செய்திகள்