நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்- ரவி மோகன்
சென்னை எழும்பூரில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, ரகுபதி, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர்கள் ரவி மோகன், கருணாஸ், நடிகை நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அப்போது பேசிய நடிகர் ரவி மோகன், இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளா ஆனவங்க இருக்காங்க, ஆனால், தாம் நடிகனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்.
Next Story