``விருப்பமே இல்லை; இருட்டில் குதிக்கிறேன்..'' மனம்திறந்த அஜித்

x

ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

நடிப்பு என்னுடைய திட்டத்திலேயே இல்லை. நான் திடீர் நடிகர் என்று கூறியுள்ளார்.

ஸ்கூல் படித்து முடித்த பிறகு, ஆட்டோ உற்பத்தி நிறுவனத்தில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தேன்.

18 வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இறங்கினேன்.

என் அப்பா, இது மிகவும் செலவான விளையாட்டு, எங்களால் உனக்கு உதவ முடியாது, எனவே, உன் செலவுக்கு நீயே வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியதாக அஜித் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பந்தயப் பாதையில் இருந்தபோது, ஒரு மாடலிங் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வந்து உனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதன் பின் தன்னை அறியாமலேயே, பிரிண்ட் விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்ததாக அஜித் கூறியுள்ளார்.

நான் நடிப்பில் இறங்கியபோது என் பெற்றோர் கவலைப்பட்டனர்.

நான் இருட்டில் குதிக்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர்களிடம் சொன்னதாக அஜித் தெரிவித்துள்ளார்.

ஒரு தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகி நான் மறுத்திருந்தால், அவர்கள் எவ்வளவு கோபப்படுவார்கள். அதை எல்லாம் யோசித்து தான் நான் நடிகனானேன்.

தனக்கு கடன் இருந்ததாகவும், சில படங்கள் நடித்து விட்டு கடனை அடைக்க வேண்டும் என்று நினைத்ததாகவும்,

புகழ் தேடி நான் இந்தத் துறைக்கு வரவில்லை என்றும் அஜித் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்