நான் எளிதில் மனம் உடைந்து விடுவேன் - நடிகை கயாடு லோஹர்

தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அனைத்திற்கும் எளிதில் மனம் உடைந்துவிடுவேன் என, நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அனைத்திற்கும் எளிதில் மனம் உடைந்துவிடுவேன் என, நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

தமிழில் டிராகன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர். இதை தொடர்ந்து இதயம் முரளி, இம்மார்டல் மற்றும் சிம்புவின் 49வது படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கயாடு லோஹரிடம், எந்த ஒரு குணத்தை மாற்றிக் கொள்ள நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அனைத்திற்கும் எளிதில் மனம் உடைந்துவிடும் தன்னுடைய குணத்தை மாற்றி, எந்த சூழலிலும் வலிமையாக இருக்க விரும்புகிறேன் என பதிலளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com