Sruthi Hassan| ``கல்யாணமே வேண்டாம்’’ - தாயாக விரும்பும் ஸ்ருதி ஹாசன்
``கல்யாணமே வேண்டாம்’’ - தாயாக விரும்பும் ஸ்ருதி ஹாசன்
#sruthihassan #shruthihassanlatestnews திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த தனது தனிப்பட்ட கருத்துகளை நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், திருமணத்தை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக பார்ப்பதில் தமக்கு விருப்பமில்லை என்றும், துணையுடன் தினமும் ஒருவரையொருவர் தேர்வு செய்து வாழ்வதே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருமண விழாக்களுக்கு பெரும்தொகை செலவிடுவதை விட, அந்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் தாயாக விரும்புவதாகவும், குழந்தையை தத்தெடுக்கவோ அல்லது உயிரியல் ரீதியாக பெற்றெடுக்கவோ தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
