"ஹரி ஹர வீரமல்லுவில் நான் தான் ஹீரோயின்"- சத்யராஜ் கலகல பேச்சு
நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்புல உருவாகிருக்க ஹரிஹர வீரமல்லு திரைப்படம் வர்ற ஜூன் 12ம் தேதி ரிலீசாகப் போகுது...
பட வெளியீட்ட முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டைல செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துச்சு...
இதுல இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் கலந்துக்கிட்டாங்க...
மேடைல பேசுன சத்யராஜ்...இந்தப்படத்துல நான் தான் ஹீரோயின்னு சொல்லி கலகலப்பாக்கிட்டாரு...அதுக்கு அவர் சொன்ன காரணத்த நீங்களே கேளுங்க...
அடுத்து பேசுன இசையமைப்பாளர் கீரவாணி, தான் புதுமுகங்களோட வேலை செய்ய ஆர்வம் காட்டுறது ஏன்னு விளக்கம் கொடுத்தாரு...
ஹரிஹர வீரமல்லு திரைப்படத்துல நம்மளோட பாரம்பரியம், பண்பாடு எவ்ளோ முக்கியங்கிறத அடுத்த தலைமுறைக்கு கடத்துறது தான் பவன் கல்யாணோட கதாபாத்திரம்னு சொன்னாரு ஹரிஹர வீரமல்லு திரைப்பட இயக்குனர் ஜோதி கிருஷ்ணா...
சரி இது ஒருபுறமிருக்க...ஹரிஹர வீரமல்லு படத்துல ஏற்கனவே 3 பாடல்கள் வெளியான நிலைல 4வது பாடலான தார தார ரிலீசாகிருக்கு...
நிதி அகர்வாலோட நடனம் ரசிகர்கள கவர்ந்துருக்கு...
