ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : திரைபிரபலங்கள் வரவேற்பு

ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தை திரைத்துறை பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : திரைபிரபலங்கள் வரவேற்பு
Published on

இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள, நடிகர்கள் விஷால், விவேக், நடிகை சமந்தா, இந்துஜா மற்றும் இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்டோர் ஹைதராபாத் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


"மாணவர்களுக்கு பெண்ணியம் கற்பிக்க வேண்டும்" - நடிகர் விவேக்

தாய்மை, பெண்ணியம், மனிதாபிமானத்தை மாணவர்கள் கற்க வேண்டும் என நடிகர் விவேக் கூறியுள்ளார். ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், சிறு வயதிலேயே விவேகானந்தர், வள்ளலார் தத்துவங்களை கற்றுக் கொடுத்தால், குற்றமற்ற சமூகத்தைக் கட்டமைக்க உதவும் என்றும் கூறியுள்ளார். பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

"நியாயமான தண்டனை" - ஜி.வி.பிரகாஷ்

ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே அதை பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். தவறு செய்யும் நபர்களுக்கான எச்சரிக்கை மணி என்றே இந்தச் சம்பவம் உணர்த்துவதாகவும், பெண்கள் பாதுகாப்புக்குத் துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com