தொடர் சர்ச்சையில் சிக்கும் Honey Singh... நடிகை நீது சந்திரா நீதிமன்றத்தில் வழக்கு

x

பிரபல ராப் இசை பாடகர் ஹனி சிங் மீது நடிகை நீது சந்திரா நீதிமன்றத்துல வழக்கு தொடுத்திருக்காங்க... வெறிபிடித்தவன் என்கிற ஆல்பம் பாடல்ல ஹனி சிங் பெண்கள ஆபாச பொருளா சித்தரிச்சிருப்பது உண்மையா ?

கவிஞர் வாலி லிரிக்ஸ் எழுத... அதுக்கு Rockstar Anirudh Tune போட எதிர்நீச்சலடி பாடல் மூலமா நமக்கு அறிமுகமானவர் தான் பாடகர் Honey Singh.

எதிர்நீச்சல் படம் மூலமா நமக்கு இவர் அறிமுகமாகுறதுக்கு முன்னாடியே பாலிவுட்ல Highest Paid Singer- என்ற சாதனைக்கு சொந்தக்காரரா இருந்தாரு Honey சிங்.

பஞ்சாப் மாநிலத்த பூர்விகமாக கொண்ட Honey சிங்கோட உண்மையான பேரு Hirdesh Singh. பொதுவா ராப் இசைனா அது ஆங்கிலத்துல தான் இருக்கும்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்த காலக்கட்டத்துல, தாய் மொழிலயும் ராப் பாட முடியும்னு நிருபிச்சு தனக்கென YO YO-னு தனி ட்ரெண்ட்டயே உருவாக்குனாரு.

2011 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட “International Villager” என்கிற ஆல்பம் பாடல் ஆசியா கண்டம் முழுக்க முணுமுணுக்கப்பட்டது.

ஒரே பாட்டுல பணக்காரன் ஆகிட்டான்னு சொல்ற மாதிரியே Honey சிங்கும் இந்த ஒரே பாட்டு மூலமா World Famous ஆகி இருந்தாரு.

பாலிவுட்ல எக்கச்சக்க ஹிட் பாடல்கள் பாடி இருந்தாலும், Honey சிங் பிரத்யேகமா தயாரிச்சு வெளியிடக்கூடிய ஆல்பம் சாங் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளனதாவே இருந்திருக்கு

இதன் தொடர்ச்சியா 2018 ம் ஆண்டு Makhna என்ற பாடல்ல “I am a womeniser’ என்ற பாடல் வரிகளுக்காகவும் Honey சிங் மேல FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமில்லாம Honey சிங் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாடல பாடி கொண்டிருப்பதாகவும் அவர் பொறுப்பில்லாம இப்படிப்பட்ட பாடல்கள வெளியிடுறதால அது ஒருநாள் சமூகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலா மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறதாவும் எச்சரிச்சு இருக்காங்க.

நடிகையோட Petition-ல பாடகர் Honey சிங், Lyric writer Leo Grewal, போஜ்புரி பாடகர்கள் Ragini Vishwakarma மற்றும் Arjun Ajabani உள்ளிட்டோரையும் பாடல்ல வெளியிட்ட நிறுவனத்தையும் சேர்த்திருக்காங்க.

தொடர் சர்ச்சையில் சிக்கும் Honey Singh...

நடிகை நீது சந்திரா நீதிமன்றத்தில் வழக்கு


Next Story

மேலும் செய்திகள்