திரைப்படமாகிறது, தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு சம்பவம்

ஹாலிவுட்டில் சுமார் ₨400 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது
திரைப்படமாகிறது, தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு சம்பவம்
Published on

கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக தாய்லாந்து நாட்டின் சியாராங் மாகாணத்தில் உள்ள பத்து கிலோ மீட்டர் நீளமுள்ள குகைக்குள், தாய்லாந்து கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். சுமார் 2 வாரங்களாக உணவின்றி குகையில் சிக்கித்தவித்தவர்கள், பல்வேறு நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

இந்த திகில் சம்பவத்தை ஹாலிவுட்டில் திரைப்படமாக்க தயாரிப்பாளர் மிச்சேல் ஸ்காட் முடிவு செய்துள்ளார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தில், முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com