"ஹீரோ படத்தின் கதைத்திருட்டு உண்மைதான்" - இயக்குனர் பாக்கியராஜ்

ஹீரோ' படத்தின் கதைத்திருட்டு உண்மைதான் என்று இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
"ஹீரோ படத்தின் கதைத்திருட்டு உண்மைதான்" - இயக்குனர் பாக்கியராஜ்
Published on

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள ' ஹீரோ 'படத்தின் கதை உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவருடைய கதை என படத்தின் வெளியீட்டிற்கு முன்பே சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ், போஸ்கோ பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஹீரோ படத்தின் கதையையும் போஸ்கோ பிரபு பதிவுசெய்து வைத்திருந்த கதையையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே கதைதான் என தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போன்ற பிரச்சினையில் 'சர்கார்', 'கோமாளி' படங்களுக்கு என்ன நியாயம் வழங்கப்பட்டதோ, அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இயக்குனர் மித்ரன் அது குறித்து பதிலளிக்கவில்லை எனவும் கடிதத்தில் பாக்யராஜ் கூறியுள்ளார். மித்ரனின் கதைத் திருட்டு குறித்த சாட்சியாக இந்த கடிதத்தை ஏற்று கொள்ளுமாறு போஸ்கோ பிரபுவுக்கு வலியுறுத்தியுள்ள பாக்யராஜ் , நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்க போஸ்கோ பிரபுவுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com