ஏப்ரலில் "துருவ நட்சத்திரம்" ரிலீஸ் - ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட்
துருவ நட்சத்திரம் திரைப்படம், ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். கோவை மலுமிச்சம்பட்டி நடக்க உள்ள, தனது இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பாடல்கள் மட்டும் இன்றி பல்வேறு படத்தின் பின்னணி இசைகளையும் லைவாக நிகழ்த்திக் காட்ட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், AI தொழில்நுட்பத்தில் உடன்பாடு இல்லாததால், அவற்றைப் பயன்படுத்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
