தலை முடிதான் சாமி - யோகிபாபு

தமது தலைமுடிக்காக, மட்டமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தூளைப் பயன்படுத்துவதாக, நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தலை முடிதான் சாமி - யோகிபாபு
Published on

தமது தலைமுடிக்காக, மட்டமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தூளைப் பயன்படுத்துவதாக, நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே சுருட்டை முடிதான் என்று கூறியுள்ள அவர், இதனைப் பார்க்கும்போது பலருக்கும் காமெடியாகத் தெரிவதாக கூறியுள்ளார். இந்த தலைமுடியும் தமக்கு ஒரு வகையில சாமி தான் என்ற யோகிபாபு, தலைமுடியை மறைக்கும் குல்லா போடுவதில்லை என்றும், தெரிவித்துள்ளார். கவுண்டமணி செந்தில் ஆகியோர் தம்மை கவர்ந்த நகைச்சுவை நடிகர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.. மற்ற தமிழ் காமெடி நடிகர்களும் தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com