Good Bad Ugly| Ajith |மொத்த பாட்டையும் நீக்கிய படக்குழு.. மீண்டும் ஓடிடியில் வெளியான குட் பேட் அக்லி
நீக்கப்பட்ட "குட் பேட் அக்லி" திரைப்படம் மீண்டும் ஓடிடி-யில் ரிலீஸ்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வழக்கை முன்வைத்து, ஓடிடி-யில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஓடிடி-யில் வெளியிடப்பட்டு உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித், அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இடம்பெற்ற "ஒத்த ரூபாயும் தாரேன்" பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, புதிதாக பின்னணி இசை அமைத்து வெளியிடபட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பது விரைவில் தெரியவரும்.
Next Story
