Gauri Kishan | நடிகர் கவுரி கிஷன் விவகாரம் - ஒரு இயக்குநராக பா.ரஞ்சித் எடுத்த நிலைப்பாடு

x

நடிகை கௌரி கிஷனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், கௌரி கிஷனைப் பாராட்டியும், சம்பந்தப்பட்ட யூடியூபரை கண்டித்தும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கௌரி கிஷனின் தைரியத்தை பாராட்டுவதாகவும், அந்த யூடியூபரின் செயலும் கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது என்றும் குறிப்பிடுள்ளார். நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்