Aaromale FDFS | "ஆரோமலே" FDFS.. ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு
நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் வெளியான ஆரோமலே படத்தின், முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பளித்தனர்.இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படமான ஆரோமலே படத்தில், நடிகர்கள் விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில், பட குழுவினர், முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இதையடுத்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story
